Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவிற்குள் மோட்டார் சைக்கிளைக் கடத்திய சந்தேகத்தின்பேரில் Garuda நிறுவன தலைமை நிர்வாகி பணி நீக்கம்

வெளிநாட்டிலிருந்து இந்தோனேசியாவிற்குள் மோட்டார் சைக்கிளைக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் Garuda நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, பணியிலிருந்து நீக்கப்படவுள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவிற்குள் மோட்டார் சைக்கிளைக் கடத்திய சந்தேகத்தின்பேரில் Garuda நிறுவன தலைமை நிர்வாகி பணி நீக்கம்

(படம்: Antara Foto via Reuters)

வெளிநாட்டிலிருந்து இந்தோனேசியாவிற்குள் மோட்டார் சைக்கிளைக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் Garuda நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, பணியிலிருந்து நீக்கப்படவுள்ளார்.

இந்தோனேசியாவின் அரசாங்க நிறுவனங்களுக்கான அமைச்சர் எரிக் தாஹிர் (Erick Thohir) அதனைத் தெரிவித்தார்.

Garuda விமான நிறுவனத் தலைமை நிர்வாகியான அரி அஸ்கரா, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் Harley-Davidson மோட்டார் சைக்கிளை வெளிநாட்டிலிருந்து தருவித்ததாக அவர் சொன்னார்.

77,500 வெள்ளி மதிப்புள்ள மோட்டார் சைக்கிளுக்கான இறக்குமதி வரியைச் செலுத்தாமல் ஏமாற்றும் நோக்கில் அவர் பிரான்சிலிருந்து Garuda-வின் புது விமானம் ஒன்றில் அதைக் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

அவரது அந்தச் செயலுக்கு நிறுவனத்தின் நிதி நிர்வாக அதிகாரி உதவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அந்த ஏமாற்றுச் செயலில், மற்ற ஊழியர்களுக்கும் பங்கு உண்டா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்