Images
  • Gas masks
    (படம்: AFP/Manan Vatsyayana)

ஹாங்காங்கில் வாயுக் கவசங்களும் தலைக் கவசங்களும் சூடான விற்பனையில்


ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், அங்கு வாயுக் கவசங்களும் தலைக் கவசங்களும் சூடாக விற்பனையாகி வருகின்றன.

'National Calamity Hardware' கடையில் அந்தப் பொருள்களின் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு மணி நேரத்தில் 50 முதல் 60 வாயுக் கவசங்கள் வரை விற்கப்படுவதாக அக்கடையின் விற்பனையாளர் தெரிவித்தார்.

அதிலும் 3M ரகக் கவசங்களுக்கு அமோக வரவேற்பு. ஆர்ப்பாட்டக்காரர்களிடையே அது போன்ற கவசங்கள் நன்கு விலை போகின்றன.

 

Top