Images
  • giant grouper (1)
    (படம்: Bernama)

இந்தோனேசியாவிற்கு அருகே பிடிக்கப்பட்ட ராட்சத குரூப்பர் மீன்

மலேசியாவின் லாபுவான் (Labuan) தீவைச் சேர்ந்த மீனர்வர்கள், ராட்சத குரூப்பர் மீன்னைப் பிடித்துள்ளனர்.

அதன் எடை 241 கிலோகிராம்.

இந்தோனேசியாவின் செமராங் நகரத்திற்கு அருகே உள்ள கடற்பகுதியில் அது பிடிக்கப்பட்டது.

பின்னர் லாபுவானில் உள்ள ஈரச் சந்தை ஒன்றில் அது விற்கப்பட்டது.

மீனை உணவகத்தின் உரிமையாளர் ஒருவர் 13,255 ரிங்கிட்டுக்கு (4,419 வெள்ளி) வாங்கினார்.

மீன்னுடன் போராடி அதைத் தூண்டிலால் பிடிக்க மீனவர்களுக்குச் சுமார் அரை மணிநேரம் பிடித்தது. 

Top