Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வேகமாக அருகி வரும் ஒட்டகச்சிவிங்கிகள்

ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஒருகாலத்தில் பெரும் அளவில் திரிந்த ஒட்டகச்சிவிங்கிகள் இன்று ஆங்காங்கே காணப்படுகின்றன.

வாசிப்புநேரம் -
வேகமாக அருகி வரும் ஒட்டகச்சிவிங்கிகள்

படம்: Pixabay

ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஒருகாலத்தில் பெரும் அளவில் திரிந்த ஒட்டகச்சிவிங்கிகள் இன்று ஆங்காங்கே காணப்படுகின்றன.

உலகின் ஆக உயரமான பாலூட்டிகளான அவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து கொண்டுவருகின்றன.

ஆனால் அதற்கான போதிய விழிப்புணர்வு இல்லை.

1985 முதல் 2015 வரை ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்து
100,000க்கும் குறைவான எண்ணிக்கையில் பதிவாயின.

இயற்கைப் பாதுகாப்பிற்கான அனைத்துலகச் சங்கம் அந்தத் தகவலை வெளியிட்டது.

யானை, சிங்கம், காண்டா மிருகம் ஆகியவற்றுக்குக் கொடுக்கப்படும் ஆதரவு ஒட்டகச்சிவிங்கிகளுக்கு இல்லை.

விலங்கியல் தோட்டங்களிலும் வனப்பகுதிகளிலும் ஒட்டகச்சிவிங்கிகள் எளிதில் தென்படுகின்றன.

அதனால் அதன் இனம் செழிப்பாக உள்ளது என்ற தவறான மனப்பான்மையை மக்கள் கொண்டிருக்கலாம் என்று சங்கம் கூறியது.

மற்ற பகுதிகளைக் காட்டிலும் மத்திய, கிழக்குப் பகுதிகளில் ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை இன்னும் வேகமாகக் குறைந்து வருகிறது.

வேட்டையாடுதல் , சுற்றுச்சூழல் அழிக்கப்படுதல், சண்டை சச்சரவு போன்றவை ஒட்டகச்சிவிங்கிகளின் அழிவிற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்