Images
  • baby (1)

இந்தியா: 73 வயதில் ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 73 வயது மங்காயம்மா யாரமாத்தி ஒரே பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.

செயற்கைக் கருத்தரிப்பு முறையின் மூலம் அந்தக் குழந்தைகளை மருத்துவர்கள் பெற்றெடுத்தனர்.

தாயும் குழந்தைகளும் நன்றாக உள்ளனர் என்று அவரின் மருத்துவர்  BBC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மங்காயம்மாக்கும் அவரது கணவருக்கும் குழந்தை வேண்டும் என்று பல்லாண்டுகளாக காத்துகொண்டிருந்தனர்.

ஆனால் அந்த வாய்ப்பு வெகு காலமாக கனியவில்லை. அண்மையில் தான் மங்காயம்மா கருவுற்றார். அவரின் வெகுநாள் ஆசை நிறைவேறியது.


Top