Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: கோவா ஆற்றுப்பாலம் இடிந்ததில் பலரைக் காணவில்லை

இந்தியா: கோவா ஆற்றுப்பாலம் இடிந்ததில் பலரைக் காணவில்லை

வாசிப்புநேரம் -
இந்தியா: கோவா ஆற்றுப்பாலம் இடிந்ததில் பலரைக் காணவில்லை

(படம்: Reuters)


இந்தியாவின் கோவா மாநிலத்தில் பாதசாரிகள் பயன்படுத்தும் ஆற்றுப்பாலம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் இருவர் மாண்டனர். பலரைக் காணவில்லை.

மீட்புக் குழுவினர் தேடல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று மாலை பாலம் சரிந்து விழுந்தபோது, சுமார் 50 பேர் அங்கிருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தப் பாலம் கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இடிபட்ட பாலத்துக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் சொன்னார்.

நிலைமையைக் கண்காணித்துவருவதாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்