Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கோல்ஃப் உல்லாசத்தலங்களுக்கு வெளிநாட்டவர்களை அனுமதிக்கத் திட்டம்: தாய்லந்து பயணத்துறை அமைச்சர்

தாய்லந்தின் கோல்ஃப் (golf) உல்லாசத்தலங்களுக்கு வெளிநாட்டவர்களை அனுமதிக்க ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் பயணத்துறை அமைச்சர் பிபாட் ரட்சகிட்பிரகர்ன் (Phiphat Ratchakitprakarn) தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
கோல்ஃப் உல்லாசத்தலங்களுக்கு வெளிநாட்டவர்களை அனுமதிக்கத் திட்டம்: தாய்லந்து பயணத்துறை அமைச்சர்

(படம்: Unsplash)

தாய்லந்தின் கோல்ஃப் (golf) உல்லாசத்தலங்களுக்கு வெளிநாட்டவர்களை அனுமதிக்க ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் பயணத்துறை அமைச்சர் பிபாட் ரட்சகிட்பிரகர்ன் (Phiphat Ratchakitprakarn) தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறைக்குப் புத்துயிர் தருவதற்காக அவ்வாறு செய்யத் திட்டமிடப்படுகிறது.

வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இரண்டு வாரங்களுக்குக் குறிப்பிட்ட உல்லாசத்தலங்களில் தனிமைப்படுத்தப்படுவர்.

அங்கிருந்தவாறு அவர்கள் நேரம் செலவழிக்கவும் விடுதிகளைச் சுற்றிப் பார்க்கவும் கோல்ஃப் விளையாடவும் முடியும்.

திட்டம் நடப்புக்கு வர, தாய்லந்து அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது.     

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்