Images
  • google
    (படம்: AFP/Tobias Schwarz)

சீனாவின் ஆகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 2ஆம் இடம் பெற்றுள்ள கூகள் முன்னாள் ஊழியர்

கூகள் முன்னாள் ஊழியர் ஒருவர், ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகையின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த கொலின் ஹுவாங்கின் (Colin Huang) சொத்து மதிப்பு சுமார் 45 பில்லியன் டாலர்.

அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மா-வை (Jack Ma) விட அதிகமாகச் சொத்து வைத்திருக்கிறார் அவர்.

சீனாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள ஹுவாங், டென்செண்ட் (Tencent) நிறுவனத்தின் போனி மாவுக்கு (Pony Ma) அடுத்த நிலையில் உள்ளார்.

Microsoft நிறுவனத்தில் பணியிடைப் பயிற்சி செய்த ஹுவாங், பிறகு, மூன்று ஆண்டுகள் கூகுள் (Google) நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றினார்.

2015ஆம் ஆண்டில் அவர் பின்டுவோடுவோ (Pinduoduo) என்ற இணைய விற்பனைத் தளத்தை ஆரம்பித்தார்.

COVID-19 நோய்ப்பரவல் காலத்தில் அந்தத் தளத்தின் ஒரு நாள் விற்பனை 65 மில்லியனுக்கு உயர்ந்தது. குழுவாக இணைந்து மலிவு விலையில் பொருள்களை வாங்கவும் அந்தத் தளத்தில் வசதியுள்ளது.

அந்தச் செயலியில் விளையாட்டுகளை விளையாடி இலவசப் பரிசுகளையும் பெறலாம்.

உலகின் பெரும் செல்வந்தராகத் திகழும் அமசான் (Amazon) நிறுவனர் ஜெஃப் பெசொஸை (Jeff Bezos) எட்டிப் பிடிக்க விரும்புகிறார் ஹுவாங்.  

Top