Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தப்பியோடிய கொரில்லாவைப் பிடிக்க அதிரடிப் படை

சீனாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட கொரில்லா ஒன்று தன் இருப்பிடத்தை விட்டு வெளியேறி மூன்று மணிநேரம் விலங்குத் தோட்டத்தில் உலாவியது.

வாசிப்புநேரம் -
தப்பியோடிய கொரில்லாவைப் பிடிக்க அதிரடிப் படை

(படம்: Pixabay)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சீனாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட கொரில்லா ஒன்று தன் இருப்பிடத்தை விட்டு வெளியேறி மூன்று மணிநேரம் விலங்குத் தோட்டத்தில் உலாவியது.

10 ஆண்டுகளாக விலங்குத் தோட்டத்தில் வாழ்ந்து வரும் அந்த 12 வயது ஆண் கொரில்லா, மூங்கில் ஒன்றில் தாவிக் குதித்து அதன் இடத்திலிருந்து தப்பியது.

விலங்குத் தோட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள் ஆச்சரியத்தில் பார்க்க, கம்பீரமாக நடைபோட்டது அது. பின்னர் கட்டடத்தின் கூரை மீது ஏறியது.

விலங்குத் தோட்ட ஊழியர்கள் அதைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். விரைவில், உள்ளூர்க் காவல்துறையின் அதிரடிப் படையும் உதவிக்கு வந்தது.

மயக்கமருந்து ஊசியைத் துப்பாக்கியில் பொருத்தி கொரில்லா மீது பாய்ச்சினர் அதிரடிப் படையினர்.

விலங்குத் தோட்டத்திலிருந்து பார்வையாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

மயக்கமுற்ற விலங்கு பின்னர் அதன் இருப்பிடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அந்த கொரில்லா பொதுவாகச் சாந்தமானது என்றார் அதன் பராமரிப்பாளர். இதற்கு முன் பெண் குரங்குடன் அதை வாழவைத்தபோது தப்பியோட முயன்றது.

சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்