Images
  • grab
    கோப்புப் படம்: Reuters 

மலேசியாவில் Grab மோட்டார்சைக்கிள் பகிர்வுச் சேவை அறிமுகம்


வாடகை வாகனப் பகிர்வுச் சேவை நிறுவனமான Grab, மலேசியாவில் மோட்டார்சைக்கிள் பகிர்வுச் சேவைக்கான முன்னோடித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வட்டாரத்தில் அதன் போட்டி நிறுவனமான Gojekற்கு மலேசியாவில் செயல்பட ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அந்த முன்னோடித் திட்டம் அறிமுகம்கண்டுள்ளது.

அத்தகைய சேவையைச் சோதிக்கும் அரசாங்க முயற்சியின் ஓர் அங்கமாக வாடகை மோட்டார்சைக்கிள் பகிர்வுத் திட்டம் அமைந்திருப்பதாக Grab குறிப்பிட்டது.

முன்னோடித் திட்டம் 6 மாதங்களுக்கு சோதிக்கப்படும்.

அந்த 6 மாத காலத்தில் நிறுவனம் தகவல்களைத் திரட்டி, தேவையை மதிப்பிடும் வேளையில், அரசாங்க அதிகாரிகள் வாடகை மோட்டார்சைக்கிள் பகிர்வுத் திட்டத்தை நிர்வகிப்பதற்கான சட்ட நகலை வரைவர் என்று கூறப்பட்டது.

Top