Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

GrabFood சேவையால் மலர்ந்த காதல்

GrabFood உணவு விநியோகச் சேவையினால் மலேசியாவில் இணைந்த காதல் ஜோடி அண்மையில் மணமுடித்தது. தங்கள் காதல் கதையை மேலும் சிறப்பானதாக்க அவர்கள் GrabFood சேவையை மையமாகக் கொண்டு திருமணப் படங்களை எடுத்துக் கொண்டனர்.

வாசிப்புநேரம் -
GrabFood சேவையால் மலர்ந்த காதல்

(படம்: ATIQAH/Facebook)

GrabFood உணவு விநியோகச் சேவையினால் மலேசியாவில் இணைந்த காதல் ஜோடி அண்மையில் மணமுடித்தது. தங்கள் காதல் கதையை மேலும் சிறப்பானதாக்க அவர்கள் GrabFood சேவையை மையமாகக் கொண்டு திருமணப் படங்களை எடுத்துக் கொண்டனர்.

கோலாலம்பூரில் பகுதிநேரமாக வேலை செய்தனர் நூர் அடிக்கா, முகமது அஃபாண்டி.

படப்பிடிப்பில் இருவரும் GrabFood பைகளைத் தூக்கிக்கொண்டு அதற்குப் பொருத்தமாகப் பச்சை நிறத்தில் திருமண ஆடைகளை அணிந்திருந்தனர்.

டிசம்பர் 31ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தப் படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. புதுமணத் தம்பதிக்கு GrabFood நிறுவனமும் அதன் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்