Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"உனது ஆற்றலால் உலகை மாற்று"... COVID-19ஆல் உருவாகிய சுகாதாரப் பராமரிப்பு இயந்திரம்...

ஹாங்காங்கைச் சேர்ந்த நிபுணர் குழு புதிய வகைச் சுகாதாரப் பராமரிப்பு இயந்திரத்தை வெளியிடவுள்ளது.

வாசிப்புநேரம் -
"உனது ஆற்றலால் உலகை மாற்று"... COVID-19ஆல் உருவாகிய சுகாதாரப் பராமரிப்பு இயந்திரம்...

(படம்: REUTERS/Joyce Zhou)

ஹாங்காங்கைச் சேர்ந்த நிபுணர் குழு புதிய வகைச் சுகாதாரப் பராமரிப்பு இயந்திரத்தை வெளியிடவுள்ளது.

கிரேஸ் (Grace) என்ற அந்த இயந்திரம், தாதியரின் சீருடையை அணிந்திருக்கும். அது, குறிப்பாக, கிருமிப்பரவலால் தனிமையில் வாழும் முதியவர்களுடன் பழகி அவர்களுக்கு உதவியளிக்குமாம்!

ஆசியப் பெண்ணின் முக அம்சங்கள் கொண்ட கிரேஸின் நெஞ்சுப் பகுதியில் வெப்பநிலையைக் கணிக்கும் கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒருவரின் உடல் வெப்பநிலையை அது கண்டறியும்; அவரது எதிர் உணர்வுநிலையையும் அது கவனிக்கும்.

செயற்கை நுண்ணறிவு கொண்டு ஒருவருக்கு என்ன நோய் உள்ளது என்பதைக் கண்டறியும் திறனும் கிரேஸிடம் உண்டு. அதோடு, அது, நோயாளிகளிடம் ஆங்கிலம், மாண்டரின், கென்டனீஸ் என 3 மொழிகளில் பேசக்கூடியது. .

கிருமித்தொற்றுச் சூழலில் நெருக்கடி நிலையில் உள்ள சுகாதார ஊழியர்களின் பாரத்தைக் குறைக்கும் நோக்கில் கிரேஸை உருவாக்கியதாகத் திரு. டேவிட் ஹான்சன் (David Hanson) கூறுகிறார்.

மனிதரைப் போல் காட்சியளிக்கும் கிரேஸ் மக்களிடையே இயற்கையாகவே நம்பிக்கையை உருவாக்கும் என்றும் அவர் சொன்னார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்