Images
  • granny elephant dies (1)
    (படம்: AFP/STR)

உலகின் ஆக வயதான யானை 88 வயதில் மாண்டது

உலகிலேயே ஆக வயதானது என்று நம்பப்படும் கேரளாவைச் சேர்ந்த யானை 88 வயதில் மாண்டது.

தாட்சாயிணி என்று அழைக்கப்படும் அதற்குக் "கஜ முத்தாசி" எனும் பட்டம் வழங்கப்பட்டது.

அப்படியென்றால் பாட்டி யானை என்று அர்த்தம்.

கோவில் நிகழ்ச்சிகளிலும் ஊர்வலங்களிலும் பல ஆண்டுகளாகப் பங்கேற்றுவந்த தாட்சாயிணி, உண்ண மறுத்து, சென்ற செவ்வாய்க்கிழமை இறுதி மூச்சை விட்டதாக விலங்கு மருத்துவர்கள் கூறினர்.

இதற்கு முன் கின்னஸ் உலகச் சாதனையில் இடம்பெற்ற யானையின் வயது 86. அதன் பெயர் லின் வாங் (Lin Wang). லின் வாங் 2003ஆம் ஆண்டு தைவான் விலங்குத் தோட்டத்தில் மாண்டது.

மனிதர்களின் பராமரிப்பில் வளரும் யானைகள் பெரும்பாலும் 40 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.

 

Top