Images
  • firecrackers
    (படம்:  AFP)

சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பட்டாசுகள்

இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையில் பட்டாசுகள் இன்றியமையாதவை. இம்முறை சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

அவை 30 விழுக்காடு குறைவான புகையை வெளியாக்கும் என்று இந்திய மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார். அவ்வகை பட்டாசுகளில் பசுமை முத்திரையும் QR குறியீடும் பொறிக்கப்பட்டிருக்கும்.

தூய்மைக்கேட்டைக் குறைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அதேநேரத்தில் ஆய்வாளர்கள் தொடர்ந்து பட்டாசுகளுக்கு மாற்றாக அமையும் புதிய அம்சங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மிதமிஞ்சிய அளவில் புகையை வெளியாக்கும் பட்டாசுகளுக்குத் தடை விதித்தது.
 

Top