Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பொருள், சேவை வரி உதவித் தேவைப்படுவோருக்கு நிதி வழங்க வகைசெய்கிறது: பிரதமர் நஜிப்

மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக், நாட்டில் வசூலிக்கப்படும் பொருள், சேவை வரியைத் தற்காத்துப் பேசியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
பொருள், சேவை வரி உதவித் தேவைப்படுவோருக்கு நிதி வழங்க வகைசெய்கிறது: பிரதமர் நஜிப்

(படம்: Pichayada Promchertchoo)

மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக், நாட்டில் வசூலிக்கப்படும் பொருள், சேவை வரியைத் தற்காத்துப் பேசியிருக்கிறார்.

உதவித் தேவைப்படுவோருக்கு நிதி வழங்க, அது அரசாங்கத்துக்கு வகைசெய்திருப்பதாக அவர் சொன்னார்.

பூர்வீக மக்கள் அதிகம் வசிக்கும், Lipis பகுதியில் ஆற்றிய உரையில், திரு நஜிப் அதனைத் தெரிவித்தார்.

தமது ஆளும் கூட்டணி, வெளிப்படையான பொருளியலை ஊக்குவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தேவைப்படுவோருக்கு நிதி ஆதரவு வழங்கும் செயல்முறையைத் துரிதப்படுத்த, அரசாங்கம் தலையிட அது அனுமதி அளிக்கிறது என்றார் பிரதமர் நஜிப்.

பொருள், சேவை வரி விதிக்கப்பட்டதால், இவ்வாண்டு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க இயன்றதை அவர் சுட்டினார்.

குறைந்த வருவாய் ஈட்டுவோருக்கான ஆதரவையும் அதிகரிக்க முடிந்தது.
மலேசியாவில், 2015ஆம் ஆண்டில், 6 விழுக்காட்டுப் பொருள், சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது.

அதற்கு, ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி பெரிதும் குறைகூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்