Images
  • Jusuf Habibie
    (படம்: Barbara Walton/Pool/AFP)

இந்தோனேசிய முன்னாள் அதிபரின் இறுதிச் சடங்கு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் BJ ஹபிபீயின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் நடைபெற்றது.

அவரின் நல்லுடல் தென் ஜக்கர்த்தாவில் உள்ள Heroes இடுகாட்டில் புதைக்கப்பட்டது.

இந்தோனேசியாவின் மூன்றாவது அதிபரான அவர் இதயக் கோளாற்றால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 83.

அதிபர் ஜோக்கோ விடோடோவின் முன்னிலையில் திரு ஹபிபீயின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

1998-ஆம் ஆண்டு திரு சுஹார்த்தோவுக்குப் பின் இந்தோனேசிய அதிபராகப் பதவியேற்றார் திரு ஹபிபீ. 1999-ஆம் ஆண்டு வரை அவர் பதவியில் நீடித்தார்.

அவரது மறைவுக்கு இந்தோனேசியாவில் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

Top