Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காஷ்மீர் தொடர்பில் இந்தியா மீது போர் தொடுக்கவிருப்பதாக பாக்கிஸ்தானியப் போராளிக் குழு மிரட்டல்

பாக்கிஸ்தானில் உள்ள போராளிகள் குழுவின் தலைவர் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியின் தொடர்பில் இந்தியா மீது போர் தொடுக்கவிருப்பதாக மிரட்டியுள்ளார்.

வாசிப்புநேரம் -
காஷ்மீர் தொடர்பில் இந்தியா மீது போர் தொடுக்கவிருப்பதாக பாக்கிஸ்தானியப் போராளிக் குழு மிரட்டல்

(படம்: Reuters)

பாக்கிஸ்தானில் உள்ள போராளிகள் குழுவின் தலைவர் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியின் தொடர்பில் இந்தியா மீது போர் தொடுக்கவிருப்பதாக மிரட்டியுள்ளார்.

லெஷ்கா-இ-டெய்பா (Lashka-e-Taiba) இயக்கத்தின் முன்னணி அமைப்பாகக் கருதப்படும் ஜமாட் உட்-டவா (Jamaat ud-Dawa) பிரிவின் தலைவர் ஹஃபிஸ் சயிட் (Hafiz Saeed) அந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

பயங்கரவாதப் பிரிவான அது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் சிலவற்றுக்குக் காரணமாய் இருந்திருப்பதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது.

நாடாளுமன்றக் கட்டடத்தில் 2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் அதுவே காரணம் என்று இந்தியா கூறுகிறது.

2008ஆம் ஆண்டு மும்பையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் அது பொறுப்பு என்று கூறப்படுகிறது.

அந்தத் தாக்குதலில் 166 பேர் மாண்டனர்.

அமெரிக்க அதிகாரிகள் சயிட்டைத் தேடி வருகின்றனர்.

அவரைப் பிடித்துத் தருவோருக்கு வாஷிங்டன், 10 மில்லியன் டாலர் வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

காஷ்மீரில் ஏற்படும் போரில் வெற்றி கிட்டும் என்று ஒரு கூட்டத்தில் தம் ஆதரவாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்