Images
  • Hagibis
    (படம்: REUTERS/Kevin Coombs)

ஹகிபிஸ் சூறாவளி - வீடுகளிலிருந்து வெளியேறுங்கள்: ஜப்பான் அதிபர்


ஜப்பானிய அதிபர் ஷின்ஸோ அபே (Shinzo Abe), ஹகிபிஸ் (Hagibis) சூறாவளி கரையைக் கடக்கும் முன், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்தச் சூறாவளியால் 60 ஆண்டு காணாத மழை ஜப்பானில் பெய்யக்கூடுமென்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

தோக்கியோ உள்ளிட்ட டொகாய், காண்டொ (Tokai, Kanto) பகுதிகளிலும் கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கையாக, அதிவேக ரயில்சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

கடைகளை மூடுவதற்கும், செயல்படும் நேரத்தைக் குறைத்துக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூர் விமானச் சேவைகள் பல நேற்றில் இருந்து ரத்துசெய்யப்பட்டுள்ளன.

Rugby உலகக் கிண்ணம், F1 கார் பந்தயம் ஆகிய போட்டிகளும் ஹகிபிஸ் சூறாவளி காரணமாகத் தடைப்பட்டுள்ளன.

 

Top