Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வியட்நாம்: ஹனோயில் பெரிய அளவிலான கிருமித்தொற்றுச் சோதனை நடத்த ஆயத்தம்

வியட்நாமியத் தலைநகர் ஹனோயில் 21,000 பேருக்குக் கிருமித்தொற்றுச் சோதனை நடத்த அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.

வாசிப்புநேரம் -

வியட்நாமியத் தலைநகர் ஹனோயில் 21,000 பேருக்குக் கிருமித்தொற்றுச் சோதனை நடத்த அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.

டா நான்ங் (Da Nang) நகரில் அண்மையில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதனால், அங்கு சென்று திரும்புவோருக்கு மருத்துவச் சோதனை மேற்கொள்ளப்படும்.

துரிதச் சோதனைக் கருவிகள் பயன்படுத்தப்படும் என்று அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வியட்நாமில் இன்று 9 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் அனைவருமே டா நான்ங் நகருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹனோயில் மதுக்கூடங்கள் மூடப்பட்டதோடு, பெரிய அளவிலான ஒன்றுகூடலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்