Images
  • Wuhan (1)
    படம்: REUTERS

துறைமுகங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் மலேசியா

COVID-19 கிருமிப் பரவல் காரணமாகத் துறைமுகங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மலேசியா உத்தரவிட்டுள்ளது.

Westerdam சொகுசுக் கப்பல், கிள்ளான் துறைமுகத்தில் அணைவதற்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

அது பற்றி முடிவெடுத்து அறிவிப்பதற்குள், அந்தக் கப்பலைக் கம்போடியாவுக்குச் செலுத்த அதன் அதிகாரிகள் முடிவெடுத்ததாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் (Anthony Loke) கூறினார்.

கிள்ளான் துறைமுகம் வழக்கம்போல் செயல்படுகிறது. அங்கு சென்றுசேரும் சுற்றுப் பயணிகளின் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

அதற்கேற்ப அங்கு உடல்வெப்பத்தை அளவிடும் கருவிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன என்று திரு.அந்தோனி கூறினார்.

 

Top