Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: HIV கிருமிதொற்றிய நோயாளிகள் பதறவேண்டாம்!

HIV கிருமிதொற்றிய நோயாளிகளைப் பதறவேண்டான் என இந்தோனேசியச் சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது. 

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா: HIV கிருமிதொற்றிய நோயாளிகள் பதறவேண்டாம்!

(படம்: AFP/SIA KAMBOU)

HIV கிருமிதொற்றிய நோயாளிகளைப் பதறவேண்டாம் என இந்தோனேசியச் சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.

அந்நாட்டில் இருக்கும் சில மருத்துவமனைகளில் HIV கிருமிக்கான தடுப்பு மருந்துகள் முடிந்துபோனதைத் தொடர்ந்து நோயாளிகள் பதற்றமடைந்தனர்.

சுமார் 30 மருத்துவமனைகளிலும் சுகாதார நிலையங்களிலும் TLE எனப்படும் தடுப்பு மருந்து காலியானது.

TLE மருந்தைக் கடந்த ஆண்டு இறக்குமதி செய்யும் முயற்சி தோல்வியடைந்ததாக இந்தோனேசியச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

The Global Fund எனப்படும் உலக நிதி நிறுவனத்தின் வாயிலாக TLE மாத்திரைகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதை அது பின்னர் உறுதிசெய்தது.

இந்தோனேசியாவில் சுமார் 300,000 நோயாளிகள் TLE தடுப்பு மருந்தைப் பயன்படுத்துகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்