Images
  • hk (1)
     (படம்: AFP/ISAAC LAWRENCE)

ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டம் - வெளிநாடுகளில் வசிக்கும் 6 பேரைக் கைது செய்வதற்கு உத்தரவு

ஹாங்காங் காவல்துறையினர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறிய சந்தேகத்தின் பேரில், வெளிநாடுகளில் வசிக்கும் 6 ஹாங்காங்-வாசிகளைக் கைது செய்வதற்கு உத்தரவிட்டுள்ளனர்.

சீனாவின் அதிகாரத்துவ செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கைது உத்தரவு குறித்து ஹாங்காங் காவல்துறை கருத்துரைக்க மறுத்துள்ளது.

அந்த 6 பேரில், அண்மையில் பிரிட்டனுக்குக் குடிப்பெயர்ந்த நேத்தன் லோவ் (Nathan Law) உம் அடங்குவார்.

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பெய்ச்சிங் அமல்படுத்தியதில் இருந்து, உள்ளூரில் உள்ள பலரைக் கைதுசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், வெளிநாடுகளில் வசிப்போரை மீண்டும் ஹாங்காகிற்குக் கொண்டுவரும் அதிகாரத்தை முதல் முறையாக காவல்துறையினர் தற்போது பயன்படுத்தியுள்ளனர்.

வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து, பிரிவினைவாத முயற்சிகளில் ஈடுபட்டதற்காக அந்த 6 பேருக்கான கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாய்ச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

Top