Images
  • HK Airlines in Trouble
    (படம்: AFP/Daniel Slim)

உரிமத்தை இழக்கும் நிலையில் ஹாங்காங் ஏர்லைன்ஸ்


ஹாங்காங் ஏர்லைன்ஸின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது முழுமையாக ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹாங்காங் ஏர்லைன்ஸை நிர்வகிக்கும் HNA குழுமம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதே அதன் காரணம்.

இன்னும் 5 நாள்களுக்குள் நிதிநிலையைச் சீர்செய்ய வேண்டும், இல்லையென்றால் விமானச் சேவை உரிமம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹாங்காங் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான ஹாங்காங் ஏர்லைன்ஸ் கடந்த வாரம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளதாக ஹாங்காங் அரசாங்கம் கூறியது.

வரும் 7ஆம் தேதிக்குள் ஹாங்காங் ஏர்லைன்ஸின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கப்படும்.



 

Top