Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கலவரத்தைத் தொடர்ந்து ஹாங்காங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது

ஹாங்காங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
கலவரத்தைத் தொடர்ந்து ஹாங்காங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது

(படம்: AFP/Philip Wong)

ஹாங்காங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (ஆகஸ்ட் 13) அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதல் காரணமாகக் கடுமையான குழப்பம் நிலவியது.

இரண்டாவது நாளாக நேற்று நடந்த வன்முறையால், விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று மாலை, காயமடைந்த ஒருவரை மருத்துவ உதவியாளர்கள் விமான நிலையத்தின் பிரதானப் பகுதிக்குக் கொண்டு வந்தனர்.

அதைத் தொடர்ந்து மோதல் நடந்தது. காவல்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர். விமான நிலையத்தில் மூவர் தாக்கப்பட்டனர்.

அவர்களிடம் சீனாவிலிருந்து வந்த காவல்துறையினர் என்பதற்கான அடையாள அட்டை இருந்தாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாறுவேடமிட்ட அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை ஹாங்காங் காவல்துறையினர் உறுதி செய்தனர்.

ஆனால், பணியில் ஈடுபட்டிருந்த தனது செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக சீனாவின் Global Times நாளேடு குறிப்பிட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்