Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

முன்னாள் Apple Daily நாளிதழ் நிர்வாக முதன்மை ஆசிரியர் ஹாங்காங் காவல்துறையால் கைது

ஹாங்காங் காவல்துறை, முன்னாள் Apple Daily

வாசிப்புநேரம் -

ஹாங்காங் காவல்துறை, முன்னாள் Apple Daily நாளிதழ் நிர்வாக முதன்மை ஆசிரியரைக் கைதுசெய்துள்ளது.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைதானார்.

அந்த நாளிதழ் தொடர்பான விசாரணையில் ஆக அண்மையில் கைதுசெய்யப்பட்டவர் அவர்.

ஊடகத் தொழிலதிபர் ஜிம்மி லாய்க்குச் சொந்தமானது அந்த நாளிதழ்.

விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்களின் அடையாளத்தை ஹாங்காங் காவல்துறை வழக்கமாக வெளியிடுவதில்லை.

இருப்பினும், முன்னாள் நாளிதழ் ஆசிரியரான 51 வயது ஆடவர், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை அறிக்கை வெளியிட்டது.

அது குறித்து, Apple Daily நாளிதழைப் பதிப்பித்து வந்த
Next Digital நிறுவனம் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

ஜூன் 17ஆம் தேதியன்று, நாளிதழின் தலைமையகத்தில் காவல்துறை சோதனை நடத்தியதில், அதன் முக்கிய சொத்துகளும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

சீனா அறிமுகம் செய்த தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நாளிதழின் கட்டுரைகள் மீறியதாகக் காவல்துறை குற்றம் சாட்டியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்