Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் சாலைகளில் மறியல் செய்வதற்குத் தடை

ஹாங்காங் சாலைகளில் மறியல் செய்வதற்குத் தடை

வாசிப்புநேரம் -

ஹாங்காங்கில் காவல்துறை அதிகாரிகளின் குடியிருப்புப் பகுதிகளில் மறியலில் ஈடுபடுவோரையும் சேதப்படுத்துவோரையும் தடை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாலைகளிலும் மறியல் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக் கட்டடங்களின்மீது லேசர் ஒளிக்கற்றைப் பேனாக்கள் உள்ளிட்ட ஒளிபாய்ச்சும் சாதனங்களைப் பயன்படுத்துவதை அந்த உத்தரவு தடை செய்கிறது.

ஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக இடம்பெறும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காவல்துறைக் குடியிருப்பை இலக்காகக் கொண்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

அவற்றைச் சேதப்படுத்தும் நோக்கில் ஆர்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளையும் இதர பொருள்களையும் வீசினர்.

காவல்துறை கொடூரமாக நடந்துகொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை சுயேச்சைக் குழு விசாரிக்கவேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை.

ஆனால் ஹாங்காங் அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்