Images
  • HK Bloodshed
    (படம்: CNA)

ஹாங்காங் ஆர்ப்பாட்டம்: சட்ட மன்ற உறுப்பினரின் காதைக் கடித்தார் ஆர்ப்பாட்டக்காரர்


ஹாங்காங்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கத்தியால் ஒருவர் குத்தியதன் விளைவாக ஐவருக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் டாய் கூ (Tai Koo) வட்டாரத்தில் உள்ள City plaza கடைத்தொகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் நான்கு ஆடவரும் பெண் ஒருவரும் காயமடைந்தனர்.

அவர்களில் இருவரின் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவத் தரப்பினர் கூறியுள்ளனர்.

தாக்கப்பட்டவர்களில் ஒருவர் ஹாங்காங்கின் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் ஆண்டிரு சியு காயின் (Andrew Chiu Ka-yin) என்று தெரிவிக்கப்பட்டது.

கடைத்தொகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அரசியல் தொடர்பான வாக்குவதம் ஏற்பட்டதாகவும், மாண்டரின் மொழி பேசிய ஆடவர் கத்தியால் தாக்கத் தொடங்கியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

கத்தியால் தாக்கிய ஆடவர் கடைத்தொகுதியிலிருந்து தப்பித்து செல்வதைத் தடுக்க முற்பட்டபோது, திரு. சியுவின் காதை அந்த ஆடவர் கடித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து காவல் அதிகாரிகள் வரும் வரை கடைத்தொகுதியில் இருந்த பொதுமக்கள் ஆடவரைப் பிடித்து வைத்தனர்.

ஆடவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். 

Top