Images
  • covid vaccine
    (கோப்புப் படம்: AFP/Jacob King)

ஹாங்காங்: தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்க முக்கியத் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) சீனாவைச் சேர்ந்த Sinovac நிறுவனத்தின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார்.

அவருடன் ஹாங்காங்கின் முக்கிய அதிகாரிகளும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.

ஹாங்காங்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் தடுப்பூசி, Sinovac நிறுவனம் தயாரித்தது.

ஒரு மில்லியன் முறை போடத் தேவையான தடுப்பூசிகளைச் சென்ற வாரம் பெய்ச்சிங் அனுப்பிவைத்தது.

வரும் வெள்ளிக்கிழமை, ஹாங்காங்கில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது.

தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்கும் விதமாகத் திருமதி லாம் அதை முன்கூட்டியே போட்டுக்கொண்டார்.

இந்த மாத இறுதிக்குள் Pfizer-BioNTech நிறுவனத்தின் தடுப்பூசி, ஹாங்காங்கிற்குச் சென்றுசேரும்.

ஹாங்காங்கிலுள்ள 7.5 மில்லியன் குடியிருப்பாளர்களும், தங்களுக்கு விருப்பமான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.  

Top