Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் உள்ள தனது முக்கிய அதிகாரியைப் பணிநீக்கம் செய்துள்ள சீனா

ஹாங்காங்கில் உள்ள தனது முக்கிய அதிகாரியைப் பணிநீக்கம் செய்துள்ள சீனா

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் உள்ள தனது முக்கிய அதிகாரியைப் பணிநீக்கம் செய்துள்ள சீனா

(File photo: Reuters)

ஹாங்காங்கில் சீனாவின் விவகாரங்களை மேற்பார்வையிடும் அலுவலகத்துக்கான தலைவரைச் சீனா பணிநீக்கம் செய்துள்ளது.

பெய்ச்சிங் ஹாங்காங்கில் பணியில் அமர்த்தியிருந்த ஆக உயரிய அதிகாரி அவர்.

சீனாவின் மனிதவள அமைச்சு அது குறித்து அறிவித்தது.

அவருக்குப் பதிலாகத் தற்போது சீனஅரசியல்-ஆலோசனை மாநாட்டின் துணைத் தலைவர் ஸியா பாவோலோங் (Xia Baolong) அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளவிருக்கிறார்.

2003-இலிருந்து 2007 வரை சீன அதிபர் சி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்தபோது, திரு ஸியா துணைச் செயலாளராக இருந்தார்.

ஹாங்காங்கின் தொடர்பு அலுவலகத்துக்கான தலைவரையும் பெய்ச்சிங் சென்ற மாதம் பணி நீக்கம் செய்தது.

ஹாங்காங்கில் குற்றஞ்சாட்டப்பட்டோரைத் தலைநிலச் சீனாவுக்கு அனுப்பி விசாரிக்க வகைசெய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவின் தொடர்பில், கடந்த ஏழு மாதங்களாக ஹாங்காங்கில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவருகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்