Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்கும் ஹாங்காங்

சீனாவுடனான எல்லையைத் திறக்கத் தயாராகும் வேளையில் ஹாங்காங் கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்குகிறது.

வாசிப்புநேரம் -
கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்கும் ஹாங்காங்

(படம்: AFP/Peter Parks)

சீனாவுடனான எல்லையைத் திறக்கத் தயாராகும் வேளையில் ஹாங்காங் கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்குகிறது.

சில பகுதிகளுக்குச் செல்ல விரும்புவோர் அரசாங்கத்தின் COVID-19 தொடர்புத் தடங்களைக் கண்டறியும் செயலியை இரண்டு வாரம் பயன்படுத்தவேண்டும்.

உணவகங்கள், மதுக்கூடங்கள், விளையாட்டு வசதிகள், கேளிக்கைத் தலங்கள் ஆகியவற்றுக்குச் செல்ல LeaveHomeSafe எனும் செயலியைப் பயன்படுத்த வேண்டியது கட்டாயம்.

தற்போது சில இடங்களில் செயலிக்குப் பதிலாகக் கையால் எழுதப்படும் படிவங்களை நிரப்பிக்கொடுக்க அனுமதிக்கப்படுகிறது.

சீன - ஹாங்காங் அதிகாரிகள் தனிமைப்படுத்தத் தேவையற்ற பயண அனுமதி பற்றிப் பேசும்போது செயலியின் பயன்பாடு முக்கிய இடத்தைப் பிடித்தது.

அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஹாங்காங் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதற்குமுன் சீனாவுடனான எல்லை முழுமையாகத் திறக்கப்படலாம் என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam)கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்