Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் 4ஆம் கட்ட கிருமிப்பரவல் அச்சம்

ஹாங்காங்கில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 4ஆவது கட்டமாகக் கிருமிப்பரவல் தலைதூக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வாசிப்புநேரம் -

ஹாங்காங்கில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 4ஆவது கட்டமாகக் கிருமிப்பரவல் தலைதூக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஹாங்காங்கில் COVID-19 சூழல் கவலை அளிப்பதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று, பல்வேறு வட்டாரங்களில் 30க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் நால்வர் உள்ளூரிலேயே நோய்த்தொற்றுக்கு ஆளாயினர்.

தொடக்கப்பள்ளி மாணவர்கள் கிருமித்தொற்றுக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது.

ஹாங்காங் அரசாங்கம், பாதுகாப்பு இடைவெளி போன்ற விதிகளை விரிவாக மறுஆய்வு செய்துவருவதாக மருத்துவத் துறை அதிகாரிகள் கூறினர்.

திங்கள்கிழமையிலிருந்தே அங்கு கிருமித்தொற்றுத் தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட்டன.

கொரோனா தொற்றால் ஹாங்காங்கில் இதுவரை 5,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 பேர் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்