Images
  • hk maid
    (படம்:AFP/Peter Parks)

பணிப்பெண்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் - கொள்கையிலிருந்து பின்வாங்கும் ஹாங்காங் நிர்வாகி

ஹாங்காங்கில் இல்லப் பணிப்பெண்களின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதற்கு முன்,அவர்கள் தடுப்பூசி போட வேண்டும் எனும் கொள்கையிலிருந்து தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) பின்வாங்கியுள்ளார்.

அந்த நடவடிக்கை, அரசதந்திரப் பின்னடைவையும், பாகுபாட்டையும் வளர்ப்பதாகக் குறைகூறப்படுகிறது.

ஆனால், ஹாங்காங்கில் உள்ள 370,000 இல்லப் பணிப்பெண்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படுவது தொடரும்.

பணிப்பெண்களுக்கான தடுப்பூசித் திட்டத்தில் இனப்பாகுபாடு ஏதும் இல்லை; அபாயத்தின் அடிப்படையில்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் திருவாட்டி லாம் கூறினார்.

கடந்த வாரயிறுதியில் 100,000க்கும் அதிகமான இல்லப் பெண்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இல்லப் பணிப்பெண்கள் அனைவரும், வரும் 9ஆம் தேதிக்குள் அரசாங்க உத்தரவை நிறைவேற்றுவர் என்று நம்புவதாகத் திருவாட்டி லாம் கூறினார். 

Top