Images
  • hack

ஹாங்காங்கில் விரைவில் இணைய அச்சுறுத்தலுக்கு எதிரான அந்தரங்கப் பாதுகாப்புச் சட்டங்கள்

ஹாங்காங்கில் இணைய அச்சுறுத்தலுக்கு எதிரான அந்தரங்கப் பாதுகாப்புச் சட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

தனிநபர்கள், அமைப்புகள் ஆகியவைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து மிரட்டுவதற்கு அல்லது
அச்சுறுத்துவதற்கு எதிரான சட்டங்கள் கூடியவிரைவில் அறிமுகம் செய்யப்படும்.

அந்த மசோதா முன்பே தாக்கல்
செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அதற்கு ஆதரவளிப்போர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஹாங்காங்கில், அரசாங்கத்துக்கு
எதிரான கருத்துகளை முன்வைப்பவர்களை அடக்க அது பயன்படுத்தப்படலாம் என்று பலர் கவலை தெரிவித்தனர்.

அந்த மசோதா குறித்துச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்.

புதிய சட்டங்களின் கீழ், குறைந்தது இரண்டு
குற்றங்களுக்காகப் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டப்படலாம்.

தகவல்களைக் கொண்டு ஒருவரை அல்லது ஒருவரின் உறவினரைத் துன்புறுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால்,
130,000 டாலர் வரை அபராதம் அல்லது ஐந்தாண்டு
வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அனுமதியின்றி வெளியிடப்படும் தகவலுக்கு, ஈராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது சுமார் 13,000 டாலர் அபராதம் விதிக்கப்படலாம்.

இந்நிலையில் ஹாங்காங்கில், புதிய சட்டத்தின் கீழ், விசாரணைக்காக இடங்களைச் சோதனை செய்வதற்கும் பொருள்களைப் பறிமுதல் செய்வதற்கும் ஆணையருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.

உலகத்தின் எந்த பகுதியிலும் தகவல்களைத்
தடுக்கவோ அகற்றவோ ஆலோசனை விடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்படும். 

Top