Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் சட்டமன்றத் தேர்தல் ஓராண்டு தள்ளிவைக்கப்படுமா?

ஹாங்காங் சட்டமன்றத் தேர்தல் ஓராண்டு தள்ளிவைக்கப்படுமா? 

வாசிப்புநேரம் -
ஹாங்காங் சட்டமன்றத் தேர்தல் ஓராண்டு தள்ளிவைக்கப்படுமா?

படம்: AFP

ஹாங்காங்கில், செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை ஓராண்டு தள்ளிவைப்பதற்கான சாத்தியம் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதுபற்றி ஆராயப்படுகிறது.

ஆனால், தேர்தலைத் தள்ளி வைப்பது, அரசாங்க எதிர்ப்பாளர்களுக்கு பேரிடியாக அமைந்துவிடக்கூடும்.

செப்டம்பர் 6 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டால், ஹாங்காங் புதிய பாதுகாப்புச் சட்டம் காரணமாக, அரசாங்க எதிர்ப்பாளர்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கலாம்.

தேர்தலைத் தள்ளி வைப்பதுபற்றி, ஹாங்காங் தலைமை நிர்வாகி, சீனாவின் உயர் ஆட்சி மன்றக் குழுவிடம் பேசக்கூடும் என்று South China Morning Post தெரிவித்துள்ளது.

சட்டமன்ற சாசனத்தின்படி, பருவநிலை, வன்முறை அல்லது பொதுச் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாய் விளங்கும் ஒரு காரணம் ஆகியவற்றுக்காகத் தேர்தலைத் தள்ளி வைக்கத் தலைமை நிர்வாகிக்கு அதிகாரம் உண்டு.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்