Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் : பள்ளி மாணவர்களின் மனிதச் சங்கிலிப் போராட்டம்

ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் : பள்ளி மாணவர்களின் மனிதச் சங்கிலிப் போராட்டம்

படம்: AFP

ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாங்காங்கில் கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

நேற்றிரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய வட்டாரத்தின் சாலைகளை மறித்தனர். ரயில் நிலையத்தைச் சேதப்படுத்திய அவர்கள் சில இடங்களில் தீ மூட்டினர்.

இந்நிலையில் இன்று காலை ஹாங்காங்கின் அனைத்து மாவட்டங்களிலும் சீருடை அணிந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிந்த நிலையில் மனிதச் சங்கிலியை அமைத்தனர்.

நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாங்காங் அமெரிக்கத் தூதரகத்துக்குச் சென்று மனுக் கொடுத்தனர். ஹாங்காங் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கிடையே ஹாங்காங் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்று சீனா மீண்டும் எச்சரித்துள்ளது.

ஹாங்காங் - சீனாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதி. அங்கு எந்த வகையான பிரிவினைவாதமும் நசுக்கப்படும் என்று சீன அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் தொடரும் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டுத் தூண்டுதல் உள்ளது என்பதற்கு நேற்றைய போராட்டம் ஓர் எடுத்துக்காட்டு என்று சீன நாளேடு குறிப்பிட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் பொறுமையைச் சோதிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த நாளேட்டில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்