Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த இளையர் கத்தியால் குத்தப்பட்டார்

ஹாங்காங்கில், பேரணி ஒன்றுக்காகத் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்துகொண்டிருந்த இளையரை, ஆடவர் ஒருவர் கத்தியால் தாக்கியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த இளையர் கத்தியால் குத்தப்பட்டார்

(படம்: AFP/VIVEK PRAKASH)

ஹாங்காங்கில், பேரணி ஒன்றுக்காகத் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்துகொண்டிருந்த இளையரை, ஆடவர் ஒருவர் கத்தியால் தாக்கியிருக்கிறார்.

அதில், 19 வயது ஆடவர் கடுமையாகக் காயமடைந்தார்.

வயிற்றில் கத்திக் குத்துக் காயங்களைக் கொண்டிருந்த அந்த இளையரைக் காட்டும் படங்கள், சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, மற்றொரு ஆடவர், சீனாவுக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டதாகத் தகவல் அளிக்கப்பட்டது.

ஹாங்காங், சீனாவின் ஒரு பகுதி என்றும், ஹாங்காங்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் சீர்குலைத்துவிட்டனர் என்றும் அந்தக் காணொளியில் குறிப்பிடப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்