Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் பாதுகாப்புச் சட்டம் - ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்கு அழைப்பு

ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தை இன்று நடத்த அமெரிக்காவும், பிரிட்டனும் அழைப்பு விடுத்துள்ளன.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் பாதுகாப்புச் சட்டம் - ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்கு அழைப்பு

கோப்புப்படம்: AFP

ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தை இன்று நடத்த அமெரிக்காவும், பிரிட்டனும் அழைப்பு விடுத்துள்ளன.

ஹாங்காங்குக்கான புதிய பாதுகாப்புச் சட்டத்துக்குச் சீன நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது.

அதன் தொடர்பில் விவாதிக்க அமெரிக்காவும், பிரிட்டனும் ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தைக் கூட்டவுள்ளன.

புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் காணொளி வழியே விவாதம் நடத்தப்படும் என்று அரசதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பல்வேறு அம்சங்கள் குறித்துக் கேள்வி எழுப்பலாம்.

அதற்குச் சீனா கொள்கைை அளவில் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது.

இந்த வாரத் தொடக்கத்தில், புதிய சட்டம் தொடர்பில் விவாதிக்கப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்துக்கு வாஷிங்டன் அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால், அதைச் சீனா அனுமதிக்கவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்