Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டம் மேம்பட்ட தன்னாட்சியைக் கீழறுக்காது: ஹாங்காங் நிர்வாகி

ஹாங்காங்கில் அறிமுகமாகவிருக்கும் தேசியப் பாதுகாப்புச் சட்டம், நகரின் நீதித்துறைச் சுதந்திரத்தையும் தற்போது அது அனுபவித்துவரும் மேம்பட்ட தன்னாட்சியையும் கீழறுக்காது எனத் தலைமை நிர்வாகி கேரி லாம் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டம் மேம்பட்ட தன்னாட்சியைக் கீழறுக்காது: ஹாங்காங் நிர்வாகி

(கோப்புப் படம்: REUTERS/Carlos Garcia Rawlins)

ஹாங்காங்கில் அறிமுகமாகவிருக்கும் தேசியப் பாதுகாப்புச் சட்டம், நகரின் நீதித்துறைச் சுதந்திரத்தையும் தற்போது அது அனுபவித்துவரும் மேம்பட்ட தன்னாட்சியையும் கீழறுக்காது எனத் தலைமை நிர்வாகி கேரி லாம் கூறியிருக்கிறார்.

புதிய சட்டத்தின் அடிப்படைகள் தெளிவாய் இருப்பதாக அவர் சொன்னார்.

ஹாங்காங் நீதித்துறை எழுப்பிய அக்கறைக்குரிய அம்சங்களுக்குப் பதிலளித்துத் திருமதி லாம் பேசினார்.

பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளைத் தாம் தனிப்பட்ட முறையில் தெரிவு செய்யப்போவதில்லை என்றார் அவர்.

மாறாக அவர்கள், ஹாங்காங் நீதித்துறை ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்படுவர் என்றார் திருமதி லாம்.

ஹாங்காங் நீதி முறையின் மீதும், நீதிபதிகள் மீதும் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

புதிய சட்டம் தொடர்ந்து மனித உரிமையைப் பாதுகாக்கும்; பேச்சு, ஊடகச் சுதந்திரத்துக்கு எந்தப் பாதிப்பும் நேராது என்று அவர் உறுதியளித்தார்.

சட்டத்தை முறையாகச் செயல்படுத்தும் பொறுப்பில் பெரும்பகுதியைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் திருமதி லாம் சொன்னார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்