Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் சட்டத்தை மீறி முகக்கவசம் அணிந்த 77 பேர் கைது

ஹாங்காங்கில் முகக்கவசம் அணிவதைத் தடுக்கும் புதிய சட்டத்தை மீறியதற்காக 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாய்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் சட்டத்தை மீறி முகக்கவசம் அணிந்த 77 பேர் கைது

(படம்: Reuters/Tyrone Siu)


ஹாங்காங்கில் முகக்கவசம் அணிவதைத் தடுக்கும் புதிய சட்டத்தை மீறியதற்காக 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாய்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் சிலருக்கு வயது 12.

74 பேர் சட்டத்தை மீறியதற்கும், மூவர் முகக்கவசத்தை அகற்றும்படி அதிகாரிகள் உத்தரவிட்டபோது கீழ்ப்படிய மறுத்ததற்கும் கைது செய்யப்பட்டனர்.

தலைமை நிர்வாகி கேரி லாம் வன்முறை ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், சென்ற வாரம் நெருக்கடி கால அவசரச் சட்டத்தை அமல்படுத்தினார்.

அதன் கீழ், முகக் கவசம் அணிவதைத் தடுக்கும் புதிய சட்டம் அறிவிக்கப்பட்டது.

அதனை எதிர்த்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கட்டடங்களுக்குத் தீ மூட்டியதுடன், அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாகக் காவல்துறை கூறியது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர்; அடிபட்டோரில் பலர் மயக்கமடைந்தனர்; உயிருக்குத் தீங்கு நேரும் வகையில் காயமடைந்தனர் என்று காவல்துறை குறிப்பிட்டது.

சிலர் காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்யவும் முயன்றதாகக் கூறப்பட்டது.

வார இறுதியில் 80க்கும் அதிகமான போக்குவரத்து விளக்குகளும், ரயில் நிலையங்களும் சேதமுற்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்