Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் ஆர்ப்பாட்டத்தில் பள்ளிவாசலில் சேதம் - முஸ்லிம் சமூகத் தலைவர்களைச் சந்தித்த காவல்துறை

ஹாங்காங் காவல்துறை அதிகாரிகள் கவ்லூன் வட்டாரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முஸ்லிம் சமூகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
ஹாங்காங் ஆர்ப்பாட்டத்தில் பள்ளிவாசலில் சேதம் - முஸ்லிம் சமூகத் தலைவர்களைச் சந்தித்த காவல்துறை

(படம்:AFP/Ed Jones)

ஹாங்காங் காவல்துறை அதிகாரிகள் கவ்லூன் வட்டாரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முஸ்லிம் சமூகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காகக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர். தண்ணீரையும் பீய்ச்சியடித்தனர்.

அப்போது, பள்ளிவாசலின் பிரதான வாயிலில் நீலச் சாயம் படிந்து விட்டது. அந்த நடவடிக்கை, இஸ்லாத்துக்கு எதிரான தூண்டுதல் முயற்சி என்று சிலர் கூறினர்.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, பள்ளிவாசல் சேதப்படுத்தப்படாமல் தடுக்கும் முயற்சியில் சிறு குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தபோது அவர்களில் சிலரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், காவல்துறையினர் முஸ்லிம் சமூகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினர்.

தங்கள் நடவடிக்கை எதிர்பாராத வகையில் அமைந்து விட்டதாகக் காவல்துறையினர் விளக்கமளித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்