Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: ஜனநாயக ஆதரவு நிலைப்பாடு கொண்ட 3 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

ஹாங்காங்கில், ஜனநாயக ஆதரவு நிலைப்பாடு கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வாசிப்புநேரம் -

ஹாங்காங்கில், ஜனநாயக ஆதரவு நிலைப்பாடு கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில், சட்டமன்றத்தில் நேர்ந்த போராட்டங்களின் தொடர்பில், அவர்கள் கைதாயினர். அது, ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்துக்கு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

எடி சூ (Eddie Chu), ரேமண்ட் சான் (Raymond Chan), டெட் ஹுய் (Ted Hui) ஆகிய மூவரும், சட்டமன்ற அவமதிப்பு, ஆபத்தான பொருளைக்கொண்டு ஆபத்து விளைவிக்க முயன்றது ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய கீதம் குறைகூறப்படுவதைத் தடை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதா மீதான விவாதத்தின்போது, அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சக-சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், சென்றவாரம் பதவி விலகினர்.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய அரசியல்வாதிகளை, ஹாங்காங் அரசாங்கம் பதவியிலிருந்து நீக்க வகைசெய்யும் தீர்மானத்தை, சீனா நிறைவேற்றியதைத் தொடர்ந்து அந்தப் பிரச்சினை உருவானது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்