Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் : சாலைகளில் இருந்து வெளியேறிய பாதுகாப்பு அதிகாரிகள்

ஹாங்காங் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்துக் கடந்த சில நாள்களாக ஹாங்காங்கில் பெரிய அளவில் நடந்த வந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது மெதுவாகத் தணிந்துவருகின்றன.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் : சாலைகளில் இருந்து வெளியேறிய பாதுகாப்பு அதிகாரிகள்

படம்: AFP

ஹாங்காங் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்துக் கடந்த சில நாள்களாக ஹாங்காங்கில் பெரிய அளவில் நடந்த வந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது மெதுவாகத் தணிந்துவருகின்றன.

ஆர்ப்பாட்டக்காரைகளைத் தடுக்க சாலைகளில் குவிக்கப்படிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

போராட்டத்தின் போது அவசர மருத்துவ உதவி வாகனத்திற்கு மக்கள் வழிவிட்டது உலக மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போது மாண்ட ஆடவர் ஒருவருக்கும் ஹாங்காங் மக்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

நேற்று நடைபெற்ற பேரணியில் சுமார் 2 மில்லியன் பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஹாங்காங் தலைமை நிர்வாகி கெரி லாம் ஆர்ப்பாட்டம் தொடர்பாக நகர மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சில வகைக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவோரை வழக்கு விசாரணைக்காகச் சீனாவுக்கு அனுப்பி வைப்பதை அனுமதிக்கும் மசோதா குறித்து ஹாங்காங் வாசிகள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அந்த மசோதா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் அதனை முற்றாக அகற்ற மக்கள் அரசாங்கத்துக்கு நெருக்குதல் அளித்து வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்