Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் நாளை திட்டமிட்டபடி பேரணிகள் நடைபெறும் : ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஹாங்காங்கில் நாளை திட்டமிட்டபடி பேரணிகள் தொடரும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் நாளை திட்டமிட்டபடி பேரணிகள் நடைபெறும் : ஆர்ப்பாட்டக்காரர்கள்

படம்: AP images

ஹாங்காங்கில் நாளை திட்டமிட்டபடி பேரணிகள் தொடரும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய மசோதாவை முழுமையாகத் தடைசெய்யும்வரை பேரணிகள் தொடரும் என்று அவர்கள் கூறினர்.

இன்று மாலை ஹாங்காங் தலைவர் கெரி லாம் சர்ச்சைக்குரிய மசோதாவைத் தற்காலிகமாக ரத்துசெய்வதாகக் கூறியிருந்தார்.

அந்த முடிவை வரவேற்பதாக பெய்ச்சிங் தெரிவித்தது, ஆனால் போராட்டத்தில் வெடித்த வன்செயல்களைச் சீனா கண்டிப்பதாகக் கூறியது.

சிலவகைக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவோரை வழக்கு விசாரணைக்காக சீனாவுக்கு அனுப்பிவைப்பதை அனுமதிக்கும் மசோதாகுறித்து ஹாங்காங்வாசிகள் பலர் அதிருப்தி தெரிவித்தனர்.

அதன் தொடர்பில் கடந்தசில நாள்களாகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்