Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: ஆர்ப்பாட்ட நிலை மோசமடைய சர்ச்சைக்குரிய சட்ட மசோதா ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஹாங்காங்கில் (Hong Kong) சர்ச்சைக்குரிய சட்ட மசோதா, இரண்டாம் வாசிப்புக்கு வருவதை ஹாங்காங் அரசாங்கம் ஒத்தி வைத்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: ஆர்ப்பாட்ட நிலை மோசமடைய சர்ச்சைக்குரிய சட்ட மசோதா ஒத்திவைக்கப்பட்டுள்ளது

(படம்: AFP/Anthony Wallace)

ஹாங்காங்கில் (Hong Kong) சர்ச்சைக்குரிய சட்ட மசோதா, இரண்டாம் வாசிப்புக்கு வருவதை ஹாங்காங் அரசாங்கம் ஒத்தி வைத்திருக்கிறது.

இன்று முற்பகலில் அந்த மசோதா, மறு வாசிப்புக்கு வரவிருந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல்லாயிரம் பேர், அரசாங்க அலுவலகங்களைச் சுற்றியுள்ள முக்கியச் சாலையொன்றை முற்றுகையிட்டனர்.

ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம்மின் (Carrie Lam) அலுவலத்தைச் சுற்றியுள்ள சாலைகளை, ஆயிரக்கணக்கானோர் மறித்துக்கொண்ட காட்சி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய வேண்டாமென, கலகத் தடுப்புக் காவலர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரித்தனர்.

ஆசிய நிதி மையத்தின் முக்கியப் பகுதியில் போக்குவரத்தை நிறுத்த, சிலர் தடுப்புகளைப் போட்டனர். அந்தக் காட்சிகள், 2014ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தை நினைவூட்டின.

குறிப்பிட்ட சில குற்றச்செயல்களோடு தொடர்புடைய சந்தேகநபர்களை, சீனாவுக்கு அனுப்பி விசாரிக்கும் புதிய சட்ட மசோதாவைப் பலரும் எதிர்த்து வருகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்