Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: அதிகரிக்கும் கிருமிப்பரவல்; இரவு விடுதிகளையும் மதுக்கூடங்களையும் மூடுவதற்கு உத்தரவு

ஹாங்காங்கில் நான்காவது முறையாகக் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அரசாங்கம் இரவு விடுதிகளையும் மதுக்கூடங்களையும் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: அதிகரிக்கும் கிருமிப்பரவல்; இரவு விடுதிகளையும் மதுக்கூடங்களையும் மூடுவதற்கு உத்தரவு

படம்: AP/Kin Cheung)

ஹாங்காங்கில் நான்காவது முறையாகக் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அரசாங்கம் இரவு விடுதிகளையும் மதுக்கூடங்களையும் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

இன்று புதிதாக 83 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 நாள்களாகச் சராசரி 70 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

COVID-19 பரிசோதனை, கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமானது என்று ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) கூறினார்.

தடுப்பூசி கிடைக்கும் வரை, தமது பதவியைப் பயன்படுத்தி அனைவரையும் வலுக்கட்டாயமாகப் பரிசோதனைக்கு உட்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 130க்கும் மேற்பட்டோர் இரவு விடுதிகளுக்குச் சென்றவர்கள்.

கிருமி பரவும் இடங்களில் இருந்த 1,000 பேரின் தொடர்புத் தடங்களைக் கண்டறியும் பணிகளுக்குச் சுகாதார அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்