Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் தீவிரமடைந்துள்ள கிருமிப் பரவல்... பள்ளிகளை மூட உத்தரவு

ஹாங்காங்கில் கிருமிப் பரவல் தீவிரமடைந்துள்ளதால், கூடுதலான பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் தீவிரமடைந்துள்ள கிருமிப் பரவல்... பள்ளிகளை மூட உத்தரவு

படம்: AP/Kin Cheung)

ஹாங்காங்கில் கிருமிப் பரவல் தீவிரமடைந்துள்ளதால், கூடுதலான பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க நிலை 1 முதல் 3 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

வரும் திங்கட்கிழமையிலிருந்து 2 வாரங்களுக்கு அது நடப்பில் இருக்கும்.

ஏற்கனவே பாலர் பள்ளிகளில் சுவாசக் குழாய்த் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததால், அவை மூடப்பட்டுள்ளன.

ஹாங்காங்கில் இன்று புதிதாக 26 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது; அவர்களில் 21 பேருக்கு உள்ளூரிலேயே கிருமி தொற்றியது.

அத்தியாவசியமற்ற ஒன்றுகூடல்களைத் தவிர்க்கும்படி ஹாங்காங் சுகாதார அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். நிலைமை தீவிரமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாளை மறுநாள் சிங்கப்பூருக்கும், ஹாங்காங்குக்கும் இடையில் விமானப் போக்குவரத்துக்கான சிறப்புத் திட்டம் தொடங்கவிருக்கிறது. சிங்கப்பூரிலோ, ஹாங்காங்கிலோ,7-நாள்களில் சராசரியாக 5க்கும் அதிகமான தொடர்புபடுத்தப்படாத புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானால் அது ரத்துசெய்யப்படக்கூடும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்