Images
ஹாங்காங் கட்டடத்தில் அமைதிக்கான பதாகையைப் பொருத்திய 'சிலந்தி மனிதன்'
ஃபிரான்ஸின் சிலந்தி மனிதன் என்றழைக்கப்படும் அலேய்ன் ராபர்ட் (Alain Robert), இன்று ஹாங்காங்கின் உயரமான கட்டடம் ஒன்றில் ஏறி அமைதிக்கான பதாகையை அதன் மேல் பொருத்தியுள்ளார்.
57 வயதாகும் அந்த ஆடவர், உயரமான கட்டடங்களில் ஏறுவதில் திறன் மிக்கவர்.
ஹாங்காங்கின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள Cheung Kong Center எனும் 68 மாடிக் கட்டடத்தில் இன்று அவர் ஏறினார்.
Currently a free climber on the side of the Cheung Kong Centre building in Hong Kong. Large flag erected. Firefighters and cops on the scene. @tictoc pic.twitter.com/9bUCYa2nnv
— Marc Davies (@MarcDDavies) August 16, 2019
வெயில், புழுக்கம் எதையும் அவர் பொருட்படுத்தவில்லை.
கட்டடத்தின் மேல் ஹாங்காங், சீனக் கொடிகளைச் சித்திரிக்கும் பதாகையை அவர் பொருத்தினார். அதில் இரு கைகள் ஒன்றையொன்று பற்றிக் குலுக்குவது போன்ற படமும் இடம்பெற்றுள்ளது.