Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்கங்கை நோக்கிச் செல்லும் பெரும் சூறாவளி

ஹாங்காங்கின் சூறாவளி குறித்த எச்சரிக்கை, 8ஆம் நிலையில் இன்று பிற்பகல் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஹாங்காங்கின் சூறாவளி குறித்த எச்சரிக்கை, 8ஆம் நிலையில் இன்று பிற்பகல் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெப்பமண்டல Kompasu புயல் தென் சீனக் கடலைத் கடந்து செல்கிறது.

பெரும் சூறாவளியாக உருமாறியுள்ள Kompasu புயல் ஹைனான் (Hainan) தீவை நோக்கி மணிக்கு 25 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஹாங்காங்கிலிருந்து சுமார் 360 கிலோமீட்டர் தூரத்தில் சூறாவளி மையம் கொண்டுள்ளபோதும் ஹாங்காங்கின் கரையோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கரையோரப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், கதவுகளையும் சன்னல்களையும் மூடி, கரையோரத்தைவிட்டு ஒதுங்கி இருக்கும்படி ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு வரும் வரை பள்ளிகளும் தடுப்பூசி நிலையங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

பிலிப்பீன்ஸின் வடக்குப் பகுதியை நேற்று புரட்டிப்போட்ட Kompasu புயலால் கடும் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

அதில் குறைந்தது 11 பேர் மாண்டனர். பலரைக் காணவில்லை.

காணாமற்போனவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்