Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: தாக்குதலுக்கு ஆளான ஜனநாயக ஆதரவுக் குழுத் தலைவர் மருத்துவமனையில்

ஹாங்காங்கின் மிகப் பெரிய ஜனநாயக ஆதரவுக் குழுக்களில் ஒன்றின் தலைவரான ஜிம்மி ஷாம் (Jimmy Sham) மருத்துவமனையில் சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: தாக்குதலுக்கு ஆளான ஜனநாயக ஆதரவுக் குழுத் தலைவர் மருத்துவமனையில்

(படம்: CNA)

ஹாங்காங்கின் மிகப் பெரிய ஜனநாயக ஆதரவுக் குழுக்களில் ஒன்றின் தலைவரான ஜிம்மி ஷாம் (Jimmy Sham) மருத்துவமனையில் சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்றிரவு மோங் காக் (Mong Kok) பகுதியில் சுத்தியலை வைத்திருந்த 5 ஆடவர்களால் தாக்கப்பட்டார்.

அவருக்குத் தலையில் காயங்கள் ஏற்பட்டன.

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கிய பிறகு, திரு. ஷாம் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இரண்டாவது தாக்குதல் அது.

நேற்று, தமது குழுவின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது அவர் தாக்கப்பட்டார்.

அரசாங்க ஆதரவாளர்களே அந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் திரு. ஷாமின் குழு நம்புகிறது.

அண்மை மாதங்களில், மற்ற ஜனநாயக ஆர்வலர்களை அரசாங்க ஆதரவாளர்கள் குறிவைத்துத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்