Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் கலவரத்தின்போது கீழே விழுந்த மாணவர் மரணம்

ஹாங்காங்கில் நடைபெற்ற கலவரத்தின்போது கீழே விழுந்த மாணவர், இன்று காலை மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் கலவரத்தின்போது கீழே விழுந்த மாணவர் மரணம்

(படம்: Reuters/Thomas Peter)


ஹாங்காங்கில் நடைபெற்ற கலவரத்தின்போது கீழே விழுந்த மாணவர், இன்று காலை மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 வயது அலெக்ஸ் சாவ் சு-லொக் (Alex Chow Tsz-lok), அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, மரணமடைந்த முதல் மாணவர்.

ஹாங்காங் பல்கலைக்கழகக் கணினி அறிவியல்துறை இளநிலை மாணவரான அவர், Queen Elizabeth மருத்துவமனையில் காலை 8 மணியளவில் மாண்டது உறுதி செய்யப்பட்டது.

சங் குவான் ஓ (Tseung Kwan O) வட்டாரத்தில் கடந்த வார இறுதியின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, கார் நிறுத்தும் இடத்திலிருந்து பொருள்களை வீசிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க, காவல்துறை அதிகாரிகள் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து, அங்கு சுய நினைவிழந்த நிலையில் காணப்பட்ட அலெக்ஸ், ரத்த வெள்ளத்தில் காணப்பட்டார்.

எதன் காரணமாக அலெக்ஸ் மரணமடைந்தார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

அவரின் மரணம் தொடர்பான விசாரணை தொடர்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்